உண்மை வெளிச்சம் அறிய

வேண்டியவர்களிடம்

ஒருமுறை

சண்டையிட்டு பார்..!!

உழைப்பு பற்றி அறிய

ஒருமுறை

வியர்வை சிந்தி பார்..!!

வெற்றியின் ரகசியம் அறிய

ஒருமுறை

தோற்று பார்…!!

மகிழ்ச்சி பற்றி அறிய

ஒருமுறை

மழலையின் சிரிப்பில்

மனதோடு நனைந்து பார்..!!

உறவுகளை அறிய

ஒருமுறை

ஒன்றுகூடி பார்..!!

தலைசிறந்தவர்களை அறிய

ஒருமுறை

உன்னை மட்டும்

சிந்தித்து பார்..!!

இந்த பிறவியின் பலன் அறிய

ஒருமுறை

பிறருக்காக

வாழ்ந்து பார்…!!

கவிதை எழுதுபவர்களை அறிய

ஒருமுறை

“எதையாவது” காதலித்து பார்..!!

Advertisements