Latest Entries »

நிலவின் உருவமும்
நெற்றியில் பொட்டும்..!

கடல் அலையின் ஓரமும்
கண்ணின் புருவம்…!

சிப்பிக்குள் தெரியும் முத்தும்
சிவந்த மூக்கின் மூக்குத்தியும்.!

ரோஜாவில் பிழிந்த நிறமும்
உதட்டில் ஓடும் உதிரமும்..!

சிதறிய சில்லரை காசும்
சிரிக்கும் போதும்….!

அம்மாவசை இருட்டும்
கூந்தல் நிறமும்…!

மல்லிகையின் வாசமும்
மடித்துவைத்த உன் கூந்தலும்..!

முல்லை கொடி படர்ந்ததும்
மருதானி பூசிய அழகிய மேனியும்..!

கார்கால மேகத்தின் நகர்தலும்
காற்றுபட்டு சிலிர்த்தபோது
பறந்த தாவணியும்..!

இப்படி
இயற்கையும் நீயும்
அழகில் ஒற்றுமை
அட என் அழகியே
காலம் தான் இடைவெளி
நம் இருவருக்கும்
காற்றோடும் இயற்கையோடும்
உன்னருகில்…!
மண்ணோடு நாம் இருவரும்
மறையும் வரையும்
மறைந்த பின்பும்…!!!!!!!!!!

Advertisements

பூக்கள் உதிர்ந்து
என் வெட்கத்தை மறைத்து விட்டன
உன் புன்னகையில் உதிர்ந்தவைகளாய்…!
மறைத்த கற்பனை மட்டும்
கவிதையாய் பின்னே…..

எதுவும் எழுதபடாத காகிதத்தில்
உன் கைவிரல் தொட்டு
எழுத நினைக்கிறது
மூன்று எழுத்து முத்தை(காதல்)..
மறுக்க நினைத்தால்
இந்த பூக்கள் கொண்டே
மூடிவிடு பெண்ணே…!
சன்னலோர கம்பிகளுக்கு
இடையில்
மின்னலாய் உனது வெளிச்சம்.
பின்னிய சடையில்
வீணையாய் ஒரு தோற்றம்
கால் பதித்த தடங்களில்
கால வரையின்றி காவல்..
உன் கைவிரல் பட்டு
சிலிர்த்த துளிகளை
சேமிக்கிறேன்….
இதயத்தின் ஒரு அறைக்குள்..!

வெளுத்து போனது என்
கருத்த மீசை
கொழுத்தும் வெயிலில்…!
மணம் வந்தது அவள்
கருங் கூந்தல்
வெளுத்த என் மீசை
பட்டவுடன்…!

முகத்தில் நான் ஒட்டி
வைத்திருந்த
முகத்திரை கிளிந்து விட்டது போல
கண்ணாடி முன் நின்று
என் முகம் பார்த்த போது..
உன் முகம் தெரியுது அழகே..!

விடுமுறை விரும்பவில்லை
விலகி போகிறது உன்
பேச்சு.
நின்று போகுமோ என்
உயி்ர் மூச்சு…

நிறுத்தவும் முடியவில்லை
என் கற்பனையும் கவியும்…!

26.தோழா…!


உன்னோடு நானிருந்த
நாட்களிலும்
நீ இல்லாத
நாட்களில்
என் உதடுகளோடு
உறவாடிய அந்த
ஐந்து எழுத்து சொல்
” FRIEND”
அருமையானது….!

அலைகள் இல்லாத
கடலுக்கும்
அன்பு இல்லாத
காதலுக்கும்
கலை மட்டும்
எப்படி இருக்கும்….!

உண்மை வெளிச்சம் அறிய

வேண்டியவர்களிடம்

ஒருமுறை

சண்டையிட்டு பார்..!!

உழைப்பு பற்றி அறிய

ஒருமுறை

வியர்வை சிந்தி பார்..!!

வெற்றியின் ரகசியம் அறிய

ஒருமுறை

தோற்று பார்…!!

மகிழ்ச்சி பற்றி அறிய

ஒருமுறை

மழலையின் சிரிப்பில்

மனதோடு நனைந்து பார்..!!

உறவுகளை அறிய

ஒருமுறை

ஒன்றுகூடி பார்..!!

தலைசிறந்தவர்களை அறிய

ஒருமுறை

உன்னை மட்டும்

சிந்தித்து பார்..!!

இந்த பிறவியின் பலன் அறிய

ஒருமுறை

பிறருக்காக

வாழ்ந்து பார்…!!

கவிதை எழுதுபவர்களை அறிய

ஒருமுறை

“எதையாவது” காதலித்து பார்..!!

கண்ணே கருவிழியே கனியே

கற்பனையே கனவே கவிதையே

அமுதே முத்தே தேனே

செந்தமிழே தித்திக்கும் கரும்பே

பொன்னே நிலவே நித்திரையே

பூவே புன்னகையே சுவாசமே

இசையே இனியவளே

இவையனைத்தும்

உனக்காக சேகரித்த

உண்மை வரிகள்..!!!

மனம் மகிழ்ச்சியிலும்

மெழுகுவர்த்தி வெப்பத்திலும்

ஐஸ் காற்றிலும்

அலுமினியம் தனலிலும்

”உருகும்”

நானும் உருகுகிறேன்

உன்னருகே நானில்லாத

ஒருசில மணிதுளிகள் கூட..!!

காபி மெசினில்

என் கட்டைவிரல் கொண்டு

அழுத்திய போது

கசிந்தது…சர்கரையுடன்

பருகியபோது இனிக்கிறது..!!

கண்மனிக்கு

நிலா போன்ற நெற்றிபொட்டை

அதே கட்டைவிரலில்

பதித்து பார்த்த அழகும்

இனிக்கிறது….!!!

நண்பர்களிடம்…

நாம் மட்டுமே

பேசிக்கொண்டிருந்தால்

நட்பாகவும் ஏற்க முடியவில்லை

அவர்கள் பேசவில்லை

என்பதால்-அதை

தப்பாகவும் ஏற்க முடியவில்லை..!!

என்ன செய்ய..??

மன்னிக்கவும் இந்தியாவே..!

உன்னை வளர்ப்பதற்காக

வருந்தி எழுதியது..

ஈரோப்பா காலநிலையும்

இந்திய பெண்ணும்

ஒரு வகையில் ஒன்று தான்.

இருவருக்குமே தெரியாது

எப்போது மாறும் என்று…!!

நடை பயணத்தில்

நாய் குட்டியாய் இருந்தும்..

முன் நின்று பேச முடியாமல்

பின்னே செல்கிறேன்

வெட்கபட்டு கொண்டே..!

பேருந்து பயணத்தில்

சன்னலில் வழியே தெரியும்

இயற்கையாய் இருந்தும்..

ரசிக்க தெரியாத

ரசிகனாகவே இருக்கிறேன்..!

ரயில் பயணத்தில்

இரவுகளில் அவள் படிக்கும்

புத்தகமாய் இருந்தும்..

புரியவில்லை இந்த வார்த்தைகள் எல்லாம்.

தெரியவில்லை ஏன் என்று..!!!

மீன்களை போல்

துள்ளி ஓடினேன்

வீட்டுக்கு….

வெள்ளி தோறும்

அப்போது…..!!!

துடுப்புகள் இல்லாமல்

தண்ணீரை கடக்க முடியாமல்

துடிக்கிறேன்

இப்போது….!!!

ஊஞ்சலில் வைத்து அவளுக்கு

தாலாட்டிய போது வராத

உறக்கம்…

பஞ்சனை போன்ற என்

மடியினில் சாய்ந்தவுடன்

சொர்க்கத்திற்கே சென்றிருந்தாள்..

நான் இல்லாத நேரங்களில்

விழித்தே இருந்ததினால்….!!!

செவ்விதழில் செப்பிய

முத்துக்கள் அனைத்தும்

செந்தமிழ்….

காவிரி ஆற்றங்கறை

திறப்பின் வழியே

ஓடிய நீரோடை போன்ற

கன்னக்குழி அழகு…

பவளங்கள் நிறம் மாறும்.

சிரிக்கும்போது எட்டி பார்க்கும்

பல் வரிசையை பார்த்தால்…

இப்படி எழுதி கொண்டே

போனால் வரிகளுக்கு

பஞ்சம் இல்லை…..!!!

வருந்துகிறேன்…

இத்துடன் முடிப்பதனால்…….

பசி இருந்தும் பட்டினி..

சிரித்தாலும் பொழிவு இல்லை..

காசு இருந்தும் செலவில்லை

சுவை இருந்தும் ருசிக்கவில்லை

தூக்கம் இருந்தும் கண்கள் மூடவில்லை

மறக்க நினைத்தாலும் உறக்கமில்லை..

இசை இருந்தும் ஒலி இல்லை

வெளிச்சம் இருந்தும் ஒளி இல்லை

நிலவு இருந்தும் பௌர்னமி இல்லை

கனவு இருந்தும் கவிதை இல்லை

நினைவு தேவதை என்னை

நீங்கி சென்றதனால்…………!!!!

மறணப் படுக்கைகள் என்னவோ

கல்லறைகள்…

அவள் முகம் கானாமல்

பூட்டி அடைக்கபட்ட

கதவுகள் என்ன

சிலுவைகளா….???

அட யேசுவும் நானும்

ஒரு வகையில் ஒன்றுதான்

அவர் மூன்றாம் நாள் வெளிவருது

உலகை காக்க….!!!

நானோ சனி ஞாயிறு போக…

திங்கள் வெளிவருகிறேன்..

அவள் அழகிய

திருமுகம் கான……….!!!!!

மன்னிக்கவும்…..

கனவு கானுங்கள் என்று

திரு.கலாம் கூறினீர்களே…!!!

என் கனவில் என்னவோ

அவள் அழகிய முகம் வந்து

கவிதை எழுத துடிக்கிறது…

எழுதவா…?அழுகவா…??

பதில் எழுதுங்கள் அடுத்த

நாவலில்……!!!!

தாயோடு பேசும் போது

பாசம் இருக்கிறது..

தந்தையோடு விளையாடும் போது

மகிழ்ச்சி இருக்கிறது..

ஆசான் கற்பிக்கும் போது

அறிவு இருக்கிறது..

கடவுளை வணங்கும் போது

ஆன்மீகம் இருக்கிறது..

ஆனால்

என்னவள், என் கண் முன்னே

தோன்றும் போது,

இதையெல்லாம் தாண்டி

ஏதோ இருக்கிறதாய்

உணருகிறேன்…………!!!!

பலருக்கு மற்றவை பற்றி

யோசிக்க நேரம் இல்லை…

எனக்கு என்னை பற்றி

யோசிக்க நேரம் இல்லை…

உன்னை(இயற்கை) பற்றியே யோசிப்பதால்

என்னவோ….!!!

பேனா முள் கவிதை

எழுத துடிப்பதனால் என்னவோ….!!!

மங்களுரில் எனக்கு

மயக்கம் இன்று(May 22, 2010).

சுவாசம் கூட முழுமையாக

சுவாசிக்க முடியவில்லை….

சுவாசிக்க மறந்த

நுாற்றுக்கு மேற்பட்டோர்

கருகி காற்றிலே பறந்ததை

நினைத்து…..

இயற்கை அன்னையே…!!

போதும்.

இனி பயணிப்பவர்களாவது

அச்சமின்றி பயணிக்கட்டும்…..!!!