Archive for May, 2010


நடை பயணத்தில்

நாய் குட்டியாய் இருந்தும்..

முன் நின்று பேச முடியாமல்

பின்னே செல்கிறேன்

வெட்கபட்டு கொண்டே..!

பேருந்து பயணத்தில்

சன்னலில் வழியே தெரியும்

இயற்கையாய் இருந்தும்..

ரசிக்க தெரியாத

ரசிகனாகவே இருக்கிறேன்..!

ரயில் பயணத்தில்

இரவுகளில் அவள் படிக்கும்

புத்தகமாய் இருந்தும்..

புரியவில்லை இந்த வார்த்தைகள் எல்லாம்.

தெரியவில்லை ஏன் என்று..!!!

Advertisements

மீன்களை போல்

துள்ளி ஓடினேன்

வீட்டுக்கு….

வெள்ளி தோறும்

அப்போது…..!!!

துடுப்புகள் இல்லாமல்

தண்ணீரை கடக்க முடியாமல்

துடிக்கிறேன்

இப்போது….!!!

ஊஞ்சலில் வைத்து அவளுக்கு

தாலாட்டிய போது வராத

உறக்கம்…

பஞ்சனை போன்ற என்

மடியினில் சாய்ந்தவுடன்

சொர்க்கத்திற்கே சென்றிருந்தாள்..

நான் இல்லாத நேரங்களில்

விழித்தே இருந்ததினால்….!!!

செவ்விதழில் செப்பிய

முத்துக்கள் அனைத்தும்

செந்தமிழ்….

காவிரி ஆற்றங்கறை

திறப்பின் வழியே

ஓடிய நீரோடை போன்ற

கன்னக்குழி அழகு…

பவளங்கள் நிறம் மாறும்.

சிரிக்கும்போது எட்டி பார்க்கும்

பல் வரிசையை பார்த்தால்…

இப்படி எழுதி கொண்டே

போனால் வரிகளுக்கு

பஞ்சம் இல்லை…..!!!

வருந்துகிறேன்…

இத்துடன் முடிப்பதனால்…….

பசி இருந்தும் பட்டினி..

சிரித்தாலும் பொழிவு இல்லை..

காசு இருந்தும் செலவில்லை

சுவை இருந்தும் ருசிக்கவில்லை

தூக்கம் இருந்தும் கண்கள் மூடவில்லை

மறக்க நினைத்தாலும் உறக்கமில்லை..

இசை இருந்தும் ஒலி இல்லை

வெளிச்சம் இருந்தும் ஒளி இல்லை

நிலவு இருந்தும் பௌர்னமி இல்லை

கனவு இருந்தும் கவிதை இல்லை

நினைவு தேவதை என்னை

நீங்கி சென்றதனால்…………!!!!

மறணப் படுக்கைகள் என்னவோ

கல்லறைகள்…

அவள் முகம் கானாமல்

பூட்டி அடைக்கபட்ட

கதவுகள் என்ன

சிலுவைகளா….???

அட யேசுவும் நானும்

ஒரு வகையில் ஒன்றுதான்

அவர் மூன்றாம் நாள் வெளிவருது

உலகை காக்க….!!!

நானோ சனி ஞாயிறு போக…

திங்கள் வெளிவருகிறேன்..

அவள் அழகிய

திருமுகம் கான……….!!!!!

மன்னிக்கவும்…..

கனவு கானுங்கள் என்று

திரு.கலாம் கூறினீர்களே…!!!

என் கனவில் என்னவோ

அவள் அழகிய முகம் வந்து

கவிதை எழுத துடிக்கிறது…

எழுதவா…?அழுகவா…??

பதில் எழுதுங்கள் அடுத்த

நாவலில்……!!!!

தாயோடு பேசும் போது

பாசம் இருக்கிறது..

தந்தையோடு விளையாடும் போது

மகிழ்ச்சி இருக்கிறது..

ஆசான் கற்பிக்கும் போது

அறிவு இருக்கிறது..

கடவுளை வணங்கும் போது

ஆன்மீகம் இருக்கிறது..

ஆனால்

என்னவள், என் கண் முன்னே

தோன்றும் போது,

இதையெல்லாம் தாண்டி

ஏதோ இருக்கிறதாய்

உணருகிறேன்…………!!!!

பலருக்கு மற்றவை பற்றி

யோசிக்க நேரம் இல்லை…

எனக்கு என்னை பற்றி

யோசிக்க நேரம் இல்லை…

உன்னை(இயற்கை) பற்றியே யோசிப்பதால்

என்னவோ….!!!

பேனா முள் கவிதை

எழுத துடிப்பதனால் என்னவோ….!!!

மங்களுரில் எனக்கு

மயக்கம் இன்று(May 22, 2010).

சுவாசம் கூட முழுமையாக

சுவாசிக்க முடியவில்லை….

சுவாசிக்க மறந்த

நுாற்றுக்கு மேற்பட்டோர்

கருகி காற்றிலே பறந்ததை

நினைத்து…..

இயற்கை அன்னையே…!!

போதும்.

இனி பயணிப்பவர்களாவது

அச்சமின்றி பயணிக்கட்டும்…..!!!

தாளங்களோடு பின்னி பிணைந்த

ரிதங்களை விட

தாயின் குரல் நாளங்களில்

ஓடி விளையாடிய

பாசத்தோட தாலாட்டுக்கு

இணையாகுமோ…..

முதலில் பாசம் வைத்து

பாருங்கள்

தேசம் கூட உங்கள் கையில்….

உள் நெஞ்சம் அழுதாலும்

உதடுகள் மட்டும்

உன் பெயரை மட்டும்

உச்சரிக்கின்றன…..

உன் மீது கொண்ட

பாசத்திலா…?

இல்லை நான்

பைத்தியம் ஆனதலா…?

பதில் சொல்லடி பெண்ணே…!!!

வைத்தியம் கூட தேவையில்லை……

விண்ணை தொட்டு

முத்தமிட்ட

சத்தம் என்னவோ என்

காதுகளுக்கு கேக்கவில்லை….

அது விடியற்காலை

பொழுதில்

கார்மேகம் சூரியனை

மூடி கொண்டிருந்தனால்….!


உன்னை நீ நம்பி பார்….!

உண்டியல் வாய் அளவாது

சிரித்து பார்….!!

சிகரம் கூட தொட்டு விடும்

தூரம் தான்..தோழா…!!!

செத்துக்கொண்டே வாழவும்

செய்யாதே…!!!!

பிரச்சனைகளை பூட்டி

கொண்டே சிரிக்கவும்

செய்யாதே…!!!!!

காகித பூக்களை

காற்றினில் தவழ விடும் போது

ஒட்டி கொண்டது

இந்த கவிதை…….

எதுவும் கிருக்க படாமல்

வெருமையாக……

என்னை போலவே….!!!

தனிமையில்

கடல் போன்ற கண்ணீர்

துளிகளுக்கு

வடிகட்டி ஆனேன்

மிஞ்சியது எனவோ

உப்பு போன்ற சோகம் தான் என்னமோ…!!!

சோகம் கூட சுகம் தான் போங்க..!!!

கத்தி முனையை விட

பேனா முனையே சால சிறந்தது..

ஏனெனில்

ஏழுதப்படும் வார்தைகளை பொருத்து

கூர்மையின் பலம் விளங்கும்…

எழுதி பாருங்கள்…!

கண்ணாடி முன் நின்று

என் முகம் பார்த்து பேசிய போது..

வலிக்கிறது என் உள்ளம்,

உடைகிறது கண்ணாடி பிம்பம்,

காரணம் தெரியவில்லை…….

தெரிந்தால் சொல்லுங்களேன்…….????