Hey there! Thanks for dropping by Gana Creative Region! Take a look around and grab the RSS feed to stay updated. See you around!
தாளங்களோடு பின்னி பிணைந்த
ரிதங்களை விட
தாயின் குரல் நாளங்களில்
ஓடி விளையாடிய
பாசத்தோட தாலாட்டுக்கு
இணையாகுமோ…..
முதலில் பாசம் வைத்து
பாருங்கள்
தேசம் கூட உங்கள் கையில்….
உள் நெஞ்சம் அழுதாலும்
உதடுகள் மட்டும்
உன் பெயரை மட்டும்
உச்சரிக்கின்றன…..
உன் மீது கொண்ட
பாசத்திலா…?
இல்லை நான்
பைத்தியம் ஆனதலா…?
பதில் சொல்லடி பெண்ணே…!!!
வைத்தியம் கூட தேவையில்லை……
விண்ணை தொட்டு
முத்தமிட்ட
சத்தம் என்னவோ என்
காதுகளுக்கு கேக்கவில்லை….
அது விடியற்காலை
பொழுதில்
கார்மேகம் சூரியனை
மூடி கொண்டிருந்தனால்….!
உன்னை நீ நம்பி பார்….!
உண்டியல் வாய் அளவாது
சிரித்து பார்….!!
சிகரம் கூட தொட்டு விடும்
தூரம் தான்..தோழா…!!!
செத்துக்கொண்டே வாழவும்
செய்யாதே…!!!!
பிரச்சனைகளை பூட்டி
கொண்டே சிரிக்கவும்
செய்யாதே…!!!!!
காகித பூக்களை
காற்றினில் தவழ விடும் போது
ஒட்டி கொண்டது
இந்த கவிதை…….
எதுவும் கிருக்க படாமல்
வெருமையாக……
என்னை போலவே….!!!
தனிமையில்
கடல் போன்ற கண்ணீர்
துளிகளுக்கு
வடிகட்டி ஆனேன்
மிஞ்சியது எனவோ
உப்பு போன்ற சோகம் தான் என்னமோ…!!!
சோகம் கூட சுகம் தான் போங்க..!!!
கத்தி முனையை விட
பேனா முனையே சால சிறந்தது..
ஏனெனில்
ஏழுதப்படும் வார்தைகளை பொருத்து
கூர்மையின் பலம் விளங்கும்…
எழுதி பாருங்கள்…!
கண்ணாடி முன் நின்று
என் முகம் பார்த்து பேசிய போது..
வலிக்கிறது என் உள்ளம்,
உடைகிறது கண்ணாடி பிம்பம்,
காரணம் தெரியவில்லை…….
தெரிந்தால் சொல்லுங்களேன்…….????