நிலவின் உருவமும்
நெற்றியில் பொட்டும்..!

கடல் அலையின் ஓரமும்
கண்ணின் புருவம்…!

சிப்பிக்குள் தெரியும் முத்தும்
சிவந்த மூக்கின் மூக்குத்தியும்.!

ரோஜாவில் பிழிந்த நிறமும்
உதட்டில் ஓடும் உதிரமும்..!

சிதறிய சில்லரை காசும்
சிரிக்கும் போதும்….!

அம்மாவசை இருட்டும்
கூந்தல் நிறமும்…!

மல்லிகையின் வாசமும்
மடித்துவைத்த உன் கூந்தலும்..!

முல்லை கொடி படர்ந்ததும்
மருதானி பூசிய அழகிய மேனியும்..!

கார்கால மேகத்தின் நகர்தலும்
காற்றுபட்டு சிலிர்த்தபோது
பறந்த தாவணியும்..!

இப்படி
இயற்கையும் நீயும்
அழகில் ஒற்றுமை
அட என் அழகியே
காலம் தான் இடைவெளி
நம் இருவருக்கும்
காற்றோடும் இயற்கையோடும்
உன்னருகில்…!
மண்ணோடு நாம் இருவரும்
மறையும் வரையும்
மறைந்த பின்பும்…!!!!!!!!!!

Advertisements