பூக்கள் உதிர்ந்து
என் வெட்கத்தை மறைத்து விட்டன
உன் புன்னகையில் உதிர்ந்தவைகளாய்…!
மறைத்த கற்பனை மட்டும்
கவிதையாய் பின்னே…..

எதுவும் எழுதபடாத காகிதத்தில்
உன் கைவிரல் தொட்டு
எழுத நினைக்கிறது
மூன்று எழுத்து முத்தை(காதல்)..
மறுக்க நினைத்தால்
இந்த பூக்கள் கொண்டே
மூடிவிடு பெண்ணே…!
சன்னலோர கம்பிகளுக்கு
இடையில்
மின்னலாய் உனது வெளிச்சம்.
பின்னிய சடையில்
வீணையாய் ஒரு தோற்றம்
கால் பதித்த தடங்களில்
கால வரையின்றி காவல்..
உன் கைவிரல் பட்டு
சிலிர்த்த துளிகளை
சேமிக்கிறேன்….
இதயத்தின் ஒரு அறைக்குள்..!

வெளுத்து போனது என்
கருத்த மீசை
கொழுத்தும் வெயிலில்…!
மணம் வந்தது அவள்
கருங் கூந்தல்
வெளுத்த என் மீசை
பட்டவுடன்…!

முகத்தில் நான் ஒட்டி
வைத்திருந்த
முகத்திரை கிளிந்து விட்டது போல
கண்ணாடி முன் நின்று
என் முகம் பார்த்த போது..
உன் முகம் தெரியுது அழகே..!

விடுமுறை விரும்பவில்லை
விலகி போகிறது உன்
பேச்சு.
நின்று போகுமோ என்
உயி்ர் மூச்சு…

நிறுத்தவும் முடியவில்லை
என் கற்பனையும் கவியும்…!

Advertisements