நடை பயணத்தில்

நாய் குட்டியாய் இருந்தும்..

முன் நின்று பேச முடியாமல்

பின்னே செல்கிறேன்

வெட்கபட்டு கொண்டே..!

பேருந்து பயணத்தில்

சன்னலில் வழியே தெரியும்

இயற்கையாய் இருந்தும்..

ரசிக்க தெரியாத

ரசிகனாகவே இருக்கிறேன்..!

ரயில் பயணத்தில்

இரவுகளில் அவள் படிக்கும்

புத்தகமாய் இருந்தும்..

புரியவில்லை இந்த வார்த்தைகள் எல்லாம்.

தெரியவில்லை ஏன் என்று..!!!

Advertisements